என்ன செய்யலாம் இவர்களை

முழு பூசனிக்காயை சோற்றில் அடைக்கிறான் என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதை இந்த இத்தாலி வசந்தசேனையின் ஆட்சியில் தான் நேரில் பார்க்க முடிகிறது. உலக நாடுகள் எல்லாம் பாகிஸ்தான் முஸ்லிம் தீவிரவாதிகள் தான் மும்பை சம்பவங்களுக்கு முழு பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் நமது மத்திய சிறுபான்மையின மந்திரியின் சிறுமதியில் மட்டும் இதை பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன. அவரது கூற்றுப்படி கார்கரே எதிரிகளை ஒழிக்க வேண்டும் என்ற கடமையுணர்வால் வீரமரணம் அடையவில்லை அவரை சில சக்திகள் சதி செய்து மரணமடைய செய்திருக்கின்றன. இந்த பொன்மொழிகளை அவர் பாராளுமன்றத்தில் உதிர்த்திருக்கிறார். நமது அரசியல்வாதிகள் எவ்வளவு தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு புதிய உதாரணம் படைத்திருக்கிறார். இதற்கு ராஷ்ட்ரீ ய ஜனதா எம். பி தேவேந்திர யாதவ் ஆதரவு வேறு தெரிவித்து இருக்கிறார், எங்கே போய் முட்டிக்கொள்வது இவர்களது மதசார்பற்றை பார்த்து.

இதே கருத்தை டில்லி இமாமும், சில உருது பத்திரகைகளும் உதிர்த்திற்கென்றனவாம், இத்தனைக்கும் பிடிபட்ட தீவிரவாதி கஸாப் தாங்கள் தான் கார்காரேயை சுட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறான். நல்ல நேரம் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிப்பட்டு நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறான். அவனும் பிடிபடவில்லையெனில் இன்னும் என்னவெல்லாம் சொல்லுவார்களோ. இவர்களை பார்க்கும் பொழுது தீவிரவாதி கஸாப் எவ்வளவோ மேல் எதிரி நாட்டில் சதிவேலை செய்து நாசத்தை உண்டாக்கியிருக்கிறான், ஆனால் இவர்கள், இந்தியாவில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.